மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
2016 ஆம் ஆண்டு வெளிவந்த அருவி படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. தனது நேர்த்தியான நடிப்பால் மக்களின் கவனத்தைக் கவர்ந்த அவர், தொடர்ந்து 2021ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த வாழ் படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். மேலும் அவர் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தனது தனித்துவமான விளையாட்டால், செயலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் மீது சர்ச்சைக்குரிய பல குற்றச்சாட்டுகளை சில பெண் போட்டியாளர்கள் வைத்த நிலையில் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.
இதையும் படிங்க: ஜப்பானில் கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம்.! குவிந்த முன்னணி பிரபலங்கள்!!
காதலியை கரம்பிடித்தார்
இதற்கு ரசிகர்கள் நியாயமற்ற செயல் என தொகுப்பாளரான கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பிரதீப் ஆண்டனிக்கும், அவரது காதலி பூஜா சக்தியுடன் கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவர்களுக்கு கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த அழகிய தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!