மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜப்பானில் கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம்.! குவிந்த முன்னணி பிரபலங்கள்!!
புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். அவர் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்கள் என தமிழில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் நெப்போலியன் தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நெப்போலியனின் மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்டார். ஆனாலும் முழுமையாக குணமடையவில்லை. நடிகர் நெப்போலியன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களது திருமணம் இன்று ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திரையலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் புதுமண ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
இதையும் படிங்க: தன் 3 குழந்தைகளின் முன்பு மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகை சன்னி லியோன்.! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!