திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. ராஜமாதாவா இது! வளைகாப்பு விழாவில் மேக்கப் இல்லாமல் எப்படியுள்ளார் பார்த்தீர்களா! வியக்க வைத்த அரிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஏறக்குறைய 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் ராஜமாதாவாக செம கம்பீரமாக நடித்து அசத்தியிருந்த ரம்யா கிருஷ்ணன் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கலக்கியுள்ளார்.
தற்போதும் மார்க்கெட் குறையாத ஹீரோயின்களுக்கு இணையான நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு விழா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த அரிய புகைப்படத்தில் அவர் சாதாரண புடவையில் மேக்கப் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையாக அழகாக உள்ளார்.