திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?? அவரது கணவரை பார்த்திருக்கிறீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் படையப்பா படத்தில் வில்லியாக அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் அப்படத்தில் மிகவும் கெத்தான அவரது நடிப்பு தற்போதும் பேசப்படுகிறது.
200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் ராஜமௌலி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து அசத்தியுள்ளார். அப்படத்தில் அவர் பேசிய டயலாக் அனைத்தும் மக்களை பெருமளவில் ஈர்த்தது. ரம்யா கிருஷ்ணன் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார்.
My baby is 16....Happy Birthday #rithvickkrishna #familylove #13february pic.twitter.com/4aiXCwEJzD
— Ramya Krishnan (@meramyakrishnan) February 12, 2021
இவ்வாறு தற்போது மார்க்கெட் குறையாத நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது மகனின் 16வது பிறந்தநாளை தற்போது கொண்டாடியுள்ளார். அத்தகைய புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.