திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தங்களது செல்ல மகளின் பெயரை வித்தியாசமாக அறிவித்த ரன்பீர்-ஆலியா ஜோடி.! இந்த பெயருக்கு இவ்வளவு அர்த்தமா??
பாலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஆலியா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் அவர்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரன்பீர் மற்றும் ஆலியா தற்போது அந்த குழந்தைக்கு ராஹா என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் ராஹா (அவரது புத்திசாலி மற்றும் அற்புதமான பாட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது). ராஹா என்பது தூய்மையான வடிவுடைய தெய்வீக பாதை. மற்றும் சுவாஹிலியில் அவள் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்தில் ராஹா என்றால் குலம். பெங்காளியில் ஓய்வு, வசதி நிவாரணம் அரபு மொழியில் அமைதி என பொருள்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் தங்களது மகளது பெயரை கால் பந்தாட்ட உடையை தயாரித்து அதன் மூலம் அறிவித்துள்ளனர்.