ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
திரையரங்கில் டிக்கெட் விற்கும் நிலைமைக்கு சென்ற பிரபல நடிகை! வைரல் வீடியோ!
பொதுவாக படங்கள் தயாரிப்பதை விட தயாரித்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க தான் படக்குழு அதிகம் போராடவேண்டி இருக்கிறது. அதிகபட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் கூட சரியான ப்ரமோஷன் இல்லாமல் தோல்வி அடைந்துவிடுகிறது.
சிறு சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் சரியான ப்ரோமோஷன், விளம்பரம் மூலம் மக்களிடம் எளிதில் சென்றடைந்து வெற்றியும் பெறுகிறது. இப்படி தங்களது படத்தை புரொமோட் செய்ய பலரும் வித்தியாசமாக யோசிக்கிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கில் நாளை சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் Prati Roju Pandaage என்ற படம் வெளியாக இருக்கிறது. படத்தை விதியசமான முறையில் ப்ரமோட் செய்ய நினைத்த படக்குழு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவை ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்க வைத்துள்னனர்.
நடிகை டிக்கெட் விற்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். ராசி கண்ணாவை பார்பதற்காகவும், அவரது கையால் டிக்கெட் வாங்குவதற்காகவும் ரசிகர்கள் திரையரங்கில் மொய்க்க ஆரம்பித்துவிட்டனர்.