ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அழகாக இல்லைனாலும் ஓகே, ஆனா.. தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த நடிகை ராஷி கண்ணா!!
கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கபே என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகை ராஷி கண்ணா தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் தமிழில் அவரது கைவசம் அரண்மனை-3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்பொழுது தனக்கு விருப்பமான நடிகர், நடிகைகள் உட்பட பல தகவல்களை பகிர்ந்துகொண்ட அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய பாய் பிரண்ட் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு ராஷி கண்ணா எனக்கு எந்த ஆண் நண்பரும் கிடையாது. அப்படி எனது வாழ்க்கை துணையை கண்டுபிடிக்கும்போது நான் நிச்சயமாக சொல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு வரப்போகும் கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.