என்னது! பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா? உண்மையை போட்டுடைத்த நடிகை ராஷி கண்ணா!



rashi kanna talk about love with pumra

தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு மற்றும் விஷாலுடன் அயோக்யா என்ற படத்தில் நடித்தார். மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு தமிழில் சரியான படவாப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.ஆனால் தற்போது தெலுங்கு சினிமாவில் விஜய தேவரகொண்டா, நாகசைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

rashi kanna

 இந்நிலையில் ராஷி கண்ணா சமீபத்தில் தனியார் இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்  அவரது சிறுவயது வாழ்க்கை குறித்து கேட்டபோது அவர் நான் 16 வயது இருக்கும் போதே எனது வயது பையனுடன் டேட்டிங் சென்றுள்ளேன். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் என பரவிய தகவல் குறித்து கேட்டபோது, ராஷி கண்ணா பும்ரா ஒரு இந்திய அணி கிரிக்கெட் வீரர் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். அவரை பற்றி வேறு எதுவும் தெரியாது. நான் அவரை சந்தித்தது கூட இல்லை. எங்கள் இருவருக்குமிடையே காதல் என பரவிய செய்தி உண்மையில்லை என அவர் பதில் கூறியுள்ளார்.