ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இமயமலைக்கு சாமியாராய் போகும் ராஷிகண்ணா?.. அவரே வெளியிட்ட வீடியோ..! பக்தர்களான ரசிகர்கள்..!!
தமிழ், தெலுங்கு ஆகிய மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷிகண்ணா. இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதும் இவர் வழக்கம்.
நடிப்பது மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்ட ராஷிகண்ணா. அது தொடர்பான நேர்காணலில் தற்போது பேசியுள்ளார். இது குறித்த வீடியோவில், "ஆன்மீகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையில் கிடைத்த அனைத்தையும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்வது. வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் கர்மாவை பொருத்தே அது கிடைக்கும்.
எனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தாலும் கர்வம் என்பது ஏற்படுவது கிடையாது. எப்போதும் நான் சாதாரணமாகவே இருப்பேன். கடுமையான தோல்வியடைந்தாலும் மனசோர்வு அடையமாட்டேன். இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்வதே தலைசிறந்த வாழ்க்கைக்கு சரியானதாகும்.
நான் எந்த விஷயத்திற்கும் கோபப்படுவதும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சாதக பாதகத்தை அறிந்து அமைதியாக செயல்பட வேண்டும். இந்த உலகில் எனக்கு கிடைத்த வாழ்க்கையை மிகவும் நான் நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆன்மீகத்தில் நாட்டம் உடையோர் இமயமலைக்கு சென்று வருவது வழக்கம். ஏன் நடிகர் ரஜினிகாந்த் கூட அவ்வப்போது இமயமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவார் என்பது உலகறிந்த விஷயம். அந்த வகையில், ராசிகன்னாவும் விரைவில் இமயமலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் இமயமலை செல்லும் தகவல் அறிந்தால் அவரின் ரசிகர்களும் தங்களின் பங்க்குக்கு புறப்படலாம்.