மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் கிசுகிசுவை ஏற்படுத்திய புகைப்படம்...பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா...
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் இன்கேம் இன்கேம் பாடல் மூலம் ராஷ்மிகா அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியது. பின் இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்ற போது சலசலப்பை ஏற்படுத்தியது. இதை வைத்தே பலரும் இவர்களின் காதலை உறுதி செய்தபடி பேசி வந்தார்கள்.
இந்நிலையில் இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் டேட்டிங் சென்றுள்ளார்களாம். அங்கிருந்து வெளியேறும் பொழுது இருவரும் ஒரே காரில் ஏறி சென்றுள்ள புகைப்படங்களை பார்த்த பலரும், மீண்டும் இருவரின் காதல் குறித்து பேச துவங்கியுள்ளனர்.ஆனால், இதுகுறித்து நடிகர் விஜய் தேவ்ராகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் மௌனம் காத்து வருகிறார்கள்.