மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தி.. நடிகை ராஷ்மிகா மந்தனா தங்கியுள்ள ஹோட்டலின் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?.. கேட்டா நெஞ்சிவலியே வந்துடும்..!!
இந்திய திரையுலகில் பான் இந்திய நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்திரையுலகில் வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பின்னர் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இந்திய அளவில் புகழ்பெற்று பெருமளவில் பிரபலமடைய வைத்தது. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழி படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் நடித்த திரைப்படம் புஷ்பா.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா சென்றிருந்த நிலையில், நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடிக்கும் குட்பை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ராஷ்மிகா, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து ஃபோட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்தியமதிப்பில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். உலகளவில் இந்த ஹோட்டல் புகழ்பெற்றதாகும். இது குறித்து ரசிகர்களுக்கு தெரியவரவே, ஆத்தி.. நெஞ்சுவலி வந்துரும் போல என கமெண்ட் செய்துள்ளனர்.