மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யை தொடர்ந்து தனுஷூடன் கைகோர்த்த ராஷ்மிகா.. படக்குழு அறிவிப்பு.!
தனுஷின் 51வது படத்தில்,அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிசான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார். இதனையடுத்து தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத தனுஷின் 51 வது திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது நடிகை ராஷ்மிகா தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.