மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஷ்மிகா மந்தனாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு.!.. இயக்குனர் யார் தெரியுமா?
தென்னிந்தியா சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக நேஷனல் கிரஷ் என்று அழைத்து வருகின்றனர்.
தற்போது இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்திலும், ஹிந்தியில் ரன்பீர் கபருடன் அனிமல் திரைப்படத்திலும், தமிழில் ரெயின்போ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்கில் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜிஏ2 நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு தி கேர்ள் பிரண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார்.