திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அனிமல் படத்தில் கவர்ச்சி காட்சிக்காக மட்டும் ராஷ்மிகாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?!"
2016ம் ஆண்டு "கிரீக் பார்ட்டி" என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான "சலோ" படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2018ஆம் ஆண்டு "கீதா கோவிந்தம்" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் தான் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அங்கு அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாகியதில் மிகவும் பிஸியான நடிகையாக உள்ளார்.
அல்லு அர்ஜூனுடன் தெலுங்கில் ராஷ்மிகா நடித்த "புஷ்பா" படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ள ராஷ்மிகா, தற்போது ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் "அனிமல்" படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக "மிஷன் மஜ்" என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள அனிமல் படத்தில் படுக்கையறைக் காட்சிகளிலும், ஏராளமான முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ள ராஷ்மிகா, இந்தப் படத்தில் நடிக்க15 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.