மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.. ராஸ்மிகா மந்தனா ஓபன் டாக்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 50வது திரைப்படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனுஷின் 51வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி தனுஷின் 51 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக டிஎன்எஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, "தனுஷ் சார் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. அவருடன் பணியாற்றும்போது நிறைய கற்றுக்கொண்டு திறமையை வளர்த்துக் கொள்ளலாம். அவருடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்" என அவர் கூறியுள்ளார்.