ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதை பார்த்த பிறகு, எனக்கு அந்த ஆசை வந்துவிட்டது.! அடங்க மறு நாயகி ஓபன்டாக்!
![rasi kanna talk about vijay sethupathi](https://cdn.tamilspark.com/large/large_adad-15873.jpg)
தமிழ் சினிமாவில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதை தொடர்ந்து அவர் அடங்க மறு திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில், நடிகைக்கு உடல்கட்டாக இருப்பது மிக முக்கியம். நான் தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். எப்பொழுதும் ஆரோக்கியமான உணவையே சாப்பிடவேண்டும். அதுதான் என்னோட உடல்கட்டமைப்புக்கு காரணம்.
மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி இருவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அனுராக் மற்றும் அதர்வாவுடன் தான் நடித்தேன்.
நான் எப்பொழுது விக்ரம் வேதா படம் பார்த்தேனோ அப்பொழுதிலிருந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிட்டது.அதே போல் அட்லீயோட /, மெர்சல் ரெண்டு படங்களையும் பார்த்தபிறகு, விஜய்-அட்லீ காம்பினேஷனில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்போது வந்துள்ளது.