துபாயில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழா!! சாந்தனுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு!!!



ravana-kottam-audio-lunch-will-be-held-in-dubai-in-gran

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராகயிருப்பவர் பாக்கியராஜ்  இவரது மகனான சாந்தனு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 15 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையிலிருந்தும் அவரால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

santhanu

பாவ கதைகள் திரைப்படத்திலும் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சாந்தனு. ஆயினும் அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் ஏனோ இதுவரை அமைந்ததில்லை. தற்போது மதயானைக் கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமார் இயக்கும் 'ராவண கோட்டம்' என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை துபாயை சார்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர்  கண்ணன் ரவி குரூப்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதை முன்னிட்டு இத்திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

santhanu

இந்த தகவலின்படி படத்தின் பட்ஜெட்டை விட பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ்  தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு செய்த உதவியின் கைமாறாக தற்போது அவரது மகனுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை கண்ணன் ரவி ஏற்படுத்திக் கொடுக்கிறார் என சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.