மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதைவிட வேற என்ன வேணும்.! ரவீந்தர்- மகாலட்சுமி வீட்டிற்கு வந்த புதுவரவு.! செம கொண்டாட்டத்தில் ட்ரெண்டிங் ஜோடி!!
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக தனது பயணத்தை துவங்கி பின்னர் நடிகையாக அவதாரமெடுத்து பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் பல ரோல்களிலும் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவராக வலம் வருபவர் மகாலட்சுமி. இவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த சில காலங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் இணையத்தில் பேசுபொருளாக இருந்தது. மேலும் இருவரும் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வந்தனர். ரவீந்தர்- மகாலட்சுமி இருவரும் அவ்வப்போது நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீடியோவை ரவீந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.