மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. மாமியார் கொடுமையில் இருக்கிறாரா நடிகை மகாலட்சுமி.! உண்மையை உடைத்த ரவீந்தர்!!
பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. அவர் தற்போது சன் டிவியில் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் அவர் கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்தார்.
இந்த நிலையில் பல சர்ச்சைகளை சந்தித்த நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அவர்கள் பல விமர்சனங்களை சந்தித்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ரவீந்தர் சமீபத்தில் தான் தனியாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு பலரும் மனைவியுடன் பிரச்சனையா என கேள்வியெழுப்பினர். உடனே அவர் மகாலட்சுமியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
பின் மனைவி மகாலட்சுமி குறித்து ரவீந்தர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து இரவு மகாலட்சுமி எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் தனக்கு சமைத்து கொடுத்துவிடுவார். மேலும் எதாவது பிரச்சினை வந்தால் நான் நடிப்பதை நிறுத்திவிடவா என கேட்பார். எனது அம்மாவிற்கும், மகாலட்சுமிக்கும் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருக்கும். ஆனால் இதுவரை அவர் என் அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை. பல பிரச்சனைகளை சகித்துக்கொண்டு அவர் என்னுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என ரவீந்தர் கூறியுள்ளார்.