மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புது மனைவியை பிரிந்து, ரவீந்தர் எடுத்த அதிரடி முடிவு.! வைரலாகும் புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக களமிறங்கி, பின் பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் ஹீரோயின், வில்லி உள்ளிட்ட பல ரோல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் கடந்த மாதம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களது திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதமானாலும் ட்ரெண்டிங் ஜோடியாகவே இருந்து வருகின்றனர். மேலும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், கொடுக்கும் பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணமான சில வாரங்களிலேயே மனைவியை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது போன்ற புகைப்படமும் வைரலாகி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.