மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. என்னம்மா இது! மோசமாக மனைவி மகாலட்சுமி செய்த காரியம்.! புகைப்படத்துடன் போட்டுடைத்த ரவீந்தர்!!
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக என்ட்ரி கொடுத்து பின் நடிகையாக அவதாரமெடுத்து பல முன்னணி டிவி தொடர்களிலும் ஹீரோயின், வில்லி என பல ரோல்களிலும் நடித்து தற்போது மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான பிரபலமாக இருப்பவர் மகாலட்சுமி. அவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மஹாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தவர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் இணையத்தில் பேசுபொருளாக இருந்தது. இருவரும் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பல சேனல்களில் பேட்டியிலும் கலந்துகொண்டனர். மேலும் ரவீந்தர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து அவ்வப்போது மஹாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார்.
அவர் தற்போதும் மனைவி குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மஹாலட்சுமி முட்டையை வேகவைத்த நிலையில் அதனை நிறுத்தாமல் விட்டுள்ளார். அதனால் தண்ணீர் வற்றி முட்டை கருகும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த புகைப்படத்தை ரவீந்தர், புதிய வாழ்க்கை.. என் மனைவி.. சூப்பர் சமையல் என பதிவிட்டுள்ளார்.