மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2.0 படத்தின் வில்லன் அக்ஷய்குமார் இல்லை! உண்மையான வில்லன் யார் தெரியுமா?
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தான் ஒரு பிரமாண்ட இயக்குனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை எமிஜாக்ஸன் நடித்துள்ளார்.
திரைக்கதை, வசனம், பின்னணி இசை, 3D தொழிநுட்பம் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. 2.0 படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வாழ்த்தியும், பிரமித்தும் பார்த்து வருகின்றனர். 2.0 படம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மைல்கல்.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய்குமார் அசத்தியுள்ளார். பறவையியல் வல்லுனராக வரும் அக்சய்குமார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கியும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தற்கொலை செய்துகொள்கிறார்.
தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளது 2.0 படம். தனது நியாமான கோரிக்கை நிறைவேறாத விரகிதியில் தற்கொலை செய்துகொள்ளும் அக்ஷய்குமார் பின்னர் ஆவியாக வந்து பழிவாங்குகிறார்.
உண்மைலயே படத்தின் வில்லன் அக்ஷய் குமார் இல்லை. சொல்லப்போனால் அவர்தான் படத்தின் கதாநாயகன். நாம் நன்கு யோசித்துப்பார்த்தால் உண்மையான வில்லன் யார் என்பது நமக்கே தோன்றும்.