மொட்டை ராஜேந்திரனின் தலையில் முடி இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா.?



Reason behind mottai Rajendran name

தமிழ் சினிமாவின் நான் கடவுள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். அதனை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், டார்லிங், தில்லுக்கு துட்டு என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் நடித்த அனைத்து படங்களிலும் தலையில் முடி இல்லாமலே நடித்துள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் இவருக்கு நிறைய முடி இருந்ததாம். ரெட் இந்தியன் என்ற மலையாள படத்தில் நடிக்கும் போது கதாநாயகனிடம் அடிவாங்கி ஒரு குளத்தில் விழுவதை போல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

Mottai rajendran

அந்த குளத்தில் இராசயன நீர் கலந்துள்ளது. இது தெரியாமல் அந்த குளத்தில் விழுந்த ராஜேந்திரனுக்கு முடி அதிகப்படியாக கொட்ட துவங்கியுள்ளது. இதன் காரணமாக தலையில் மொட்டை அடித்து கொண்டு படங்களில் நடித்து வருகிறாராம்.