மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.. அப்போ அது உண்மைதானோ!! ராஜாராணி 2 சீரியலிலிருந்து திடீரென அர்ச்சனா விலக இதுதான் காரணமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி 2. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். மேலும் ராஜாராணி 2 தொடரில் வில்லியாக நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமடைந்தவர் அர்ச்சனா.
இந்த தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. காமெடியான அவரது பேச்சும், வில்லத்தனமான பார்வையும் ரசிகர்களை கவர்ந்தது. அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். இந்நிலையில் திடீரென நடிகை அர்ச்சனா ராஜாராணி 2 சீரியலிலிருந்து விலகினார். அவருக்கு பதில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த அர்ச்சனா குமார் நடித்து வருகிறார்.
இதற்கிடையே அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்பதற்காகதான் ராஜா ராணி 2 சீரியலிலிருந்து விலகியதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் சீரியலிலிருந்து விலகியது குறித்து அர்ச்சனா கூறுகையில், “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருடத்திற்கு மேல் நடித்துவிட்டேன். தற்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதிலிருந்து விலகிவிட்டேன். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்துகொள்கிறேனா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.