பட வாய்ப்புக்காக நானே அப்படி செய்தேனா! ரசிகர்கள் கூறியதால் கண்ணீர் விட்டு அழுத நடிகை ரேகா.



Rega press met chennai

தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . 

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அண்மையில் வெளிவந்த பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

Rega

தற்போது ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ஆகியோர் நடித்திருக்கும் '100% காதல்' படத்திலும் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் படக்குழுவினருடன் நேற்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ரேகா, தன்னைப் பற்றி யுடியூபில் தவறான செய்தி வெளியாவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நான் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியிடுகிறார்கள். அதை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதால் அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதற்காக, என்னை பல முறை சாகடிப்பதா? சரி அவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால், அதை பார்க்கும் மக்களும் நான் விளம்பரத்திற்காகவும், புதுப்பட வாய்ப்புகளுக்காக தான் இப்படி செய்கிறார் என கமெண்ட் செய்கின்றனர். விளம்பரத்திற்காக ஒருவர் தான் இறந்துவிட்டதாக கூறுவாரா? இதை மக்கள் ஏன் யோசிக்கத் தவறுகிறார்கள் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க சோகமாக பேசியுள்ளார்.