இளமை திரும்புதே.. நம்ம கௌதமியா இது..? மகளுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி.. வாயைப் பிளந்த நெட்டிசன்கள்..!



return-to-youth-is-this-our-gautama-gautami-giving-her

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் நடிகை கௌதமி. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற நபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இவர்களது திருமண வாழ்க்கையானது ஒரு வருடத்திலேயே விவாகரத்தில் சென்று முடிந்தது. இதனையடுத்து கௌதமி தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை திருமணம் செய்து கொண்டு 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து சென்றனர்.

இதனையடுத்து கௌதமி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கௌதமி தனது மகளுடன் மிடுக்காக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.