திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
9 வயது சிறுமியை கொலை செய்த குற்றவாளி... சிறையில் தூக்கு போட்டு தற்கொலை.!!
புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் புதுச்சேரி சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போதை பழக்கத்திற்கு அடிமையான விவேகானந்தன்(57) மற்றும் கருணாஸ்(19) ஆகிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைலியால் கழுத்தை இறுக்கி தற்கொலை
இந்தக் கொடூர பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் மீது 500 பக்க குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் இவர்களை கண்காணிக்க தனி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் இன்று காலை சிறை கழிவறையில் தனது கைளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சகோதரியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்; திருச்சியில் சம்பவம்.!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து சிறைக்கு விரைந்த காவல்துறையினர் இறந்த விவேகானந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் குற்றவாளிகளில் ஒருவரான விவேகானந்தன் தற்கொலை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!