மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி... இளம் பெண் பாலியல் பலாத்காரம்... ஜிம் ஓனர் கைது.!!
மும்பையில் இளம் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜிம் முதலாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் உடற்பயிற்சி கூடம் நிறுவனரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜிம் ஓனருடன் நெருக்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வேலை தேடி மும்பைக்கு வந்திருக்கிறார். அங்கு அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள ஜிம் உரிமையாளர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். தனக்கு வேலை வாங்கித் தருமாறு ஜிம் உரிமையாளரிடம் அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு ஜிம் உரிமையாளரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம்
இந்நிலையில் மும்பையின் பல பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க இருப்பதாக கூறிய ஜிம் முதலாளி அங்கு இளம் பெண்ணுக்கு நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். மேலும் இதனை பயன்படுத்தி இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் பலாத்காரம்.?... தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி... தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல்.!!
காவல்துறை விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த ஜிம் முதலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!