#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளம்பெண் பாலியல் பலாத்காரம்... 75 வயது முதியவர் கைது.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 75 வயது முதியவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணிடம் அத்து மீறிய முதியவர்
தண்டாரம்பட்டு பகுதியில் 35 வயது திருமணமாகாத இளம் பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரான தர்மலிங்கம் என்பவர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட முதியவர்
இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவரான தர்மலிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்... பெண் ஜிம் பயிற்சியாளர் படுகொலை... காதலன் வெறி செயல்.!!
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமை
சமீப காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் பற்றிய அச்சமும் அவற்றை தடுக்க வேண்டிய விழிப்புணர்வும் சமூகத்தில் அதிகரித்திருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!