மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு தொடரில் நடித்ததன் மூலம் சீரியல் பயணத்தை துவங்கியவர் நடிகர் அவினாஷ். தொடர்ந்து அவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு டான்ஸ் பயிற்சியின் போது காலில் முறிவு ஏற்பட்டது.
பின்னர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று அவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனலில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். நடிகர் அவினாஷ் சன் டிவியில் கயல் தொடரிலும் சைத்ரா ரெட்டிக்கு தம்பியாக நடித்தார். பின்னர் பாதியிலேயே அத்தொடரில் இருந்து விலகினார். அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். அவர் தெரசா மரியா ஜோசப் என்பவரை 13 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை அவினாஷ் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் பிக் பாஸ் சீசன் 8.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!
இதையும் படிங்க: Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!