மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க ரொம்ப அழகு! உஷார் செய்ய ஐடியா கேட்ட ரசிகர்! ஷாக் பதிலால் இதயத்தை நொறுக்கிய ராஜாராணி நாயகி!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் ராஜா ராணி. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ராஜாராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். மேலும் ஹீரோயின் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்தார். ஆனால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் தொடரை விட்டு விலகினார். இந்நிலையில் தற்போது சந்தியாவாக ரியா நடித்து வருகிறார்.
ரியா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், இவ்வளவு அழகாக உள்ளீர்களே உங்களை எப்படி கரெக்ட் செய்வது? என கேட்டுள்ளார். அதற்கு ரியா, 'பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ எனக் கூறி இதயத்தை நொறுங்க செய்துள்ளார்.