#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஜா ராணி 2; ஆலியாவிற்கு பதில் களமிறங்கும் ரியா! அட.. இவர் யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜாராணி 2. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து, ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.
ஆலியா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். அப்பொழுது ஹீரோவாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் சிறிது காலம் சீரியலிலிருந்து விலகவுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பாராம்.
இந்நிலையில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக சந்தியா வேடத்தில் ரியா என்பவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீரியல் உலகிற்கு புது வரவான இவர் சென்னையைச் சேர்ந்த மாடல் ஆவார். மேலும் இவர் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் எனவும் கூறப்படுகிறது.