மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சுஷாந்த் கைப்பட எழுதிய டைரி பக்கத்தை பகிர்ந்த காதலி ரியா! அவர் என்ன எழுதியுள்ளார் தெரியுமா?
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. தன் வசம் எடுத்து உள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், ரியா சக்ரபோர்த்தி சுஷாந்தின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த டைரியில் சுஷாந்த் கைப்பட எழுதியுள்ள அந்த பக்கத்தில் தனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த தன் மனம் கவர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் நடிகை ரியா மற்றும் தன் அப்பா, அம்மா மற்றும் செல்ல பிராணியான நாய்க்கும் நன்றி கூறியுள்ளார் சுஷாந்த். மேலும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் படத்தை வெளியிட்டுள்ள ரியா அதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்துள்ளார்.