மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏன் அப்படி செஞ்சீங்க? தொடர்ந்து நச்சரித்து வந்த நெட்டிசன்கள்! ஆவேசத்துடன் பதிலளித்த ரியோவின் மனைவி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4, 80 நாளை கடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறி இருந்தநிலையில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெறியேறினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேலும் அப்பொழுது ஒவ்வொரு போட்டியாளர்களின் வீட்டிலிருந்தும் பரிசுப்பொருட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த பரிசுகளை பார்த்ததும் தங்களது குடும்பத்தினரின் நினைவு வந்து ஆனந்தத்தில் கண்கலங்கினர். இந்நிலையில் ரியோ வீட்டிலிருந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் ஏன் இப்படி செய்தீர்கள் என ரியோவின் மனைவி ஸ்ருதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு விளக்கமளித்து அவர் கூறியதாவது, இதை சொல்வதற்கே கொஞ்சம் அசௌகரியமாகதான் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து இதைப்பற்றி என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பதால் சொல்கிறேன். இது கிறிஸ்துமஸ் நேரம் மக்களே! அதுவும் இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி! நான் ஏன் ஒரு சிலருக்கு மட்டும் பரிசுகளை அனுப்ப வேண்டும். அதான் அனைவருக்கும் அனுப்பி வைத்தேன் என கூறியுள்ளார்.