திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங் சிறுவயதில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதி சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங் ஏரளமான தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் . இந்தப் படத்தை அடுத்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘சிவலிங்கா’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிறுவயதில் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.