மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக ரித்திகா.. வைரல் புகைப்படங்கள்!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வருபவர் ரித்திகா சிங். இவர் 2002ம் ஆண்டு வெளியான "டார்ஜான் கி பேட்டி" என்ற ஹிந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் ஒரு தற்காப்புக்கு கலைஞரும், குத்துச் சண்டை வீரரும் ஆவார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவனுடன் "இறுதிச் சுற்று" படத்தில் அறிமுகமானார். முதல் படமே ரித்திகாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதையடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது "தலைவர் 170" படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது வித்தியாசமான ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.