மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா..என்னா லுக்கு! கொள்ளை அழகில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டியிழுத்த இறுதிசுற்று நாயகி!!
இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிஜ வாழ்க்கையிலும் குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கை இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பெருமளவில் பிரபலமடைய செய்தது.
நடிகை ரித்திகா சிங்கிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கூட கிடைத்தது. மேலும் அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. நடிகை ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ரித்திகா சிங் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கக்கூடியவர்.
நடிகை ரித்திகா சிங் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். மேலும் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் ரித்திகா சிங் சேலையில் செம லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.