#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாதிக்கப்பட்ட CRPF வீரர்களின் வீட்டிற்கு சென்ற ஒரே தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
சில நாட்களுக்கு முன்பு இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதி ஒருவன் வெடிபொருள் நிரப்பிய வாகனத்துடன் சென்று மோதியதில் இந்திய வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். நாட்டையே சோகத்தில் புரட்டி போட்ட இந்த சம்பவம் உலகம் முழுவதும் வைரலானது.
எல்லைமீறியா தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுத்தாலும், நாங்கள் ஆதரவு தருவதாக அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய அரசு என்ன முடிவெடுக்கவுள்ளது என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசும், பிரபலங்களும், மக்களும் ஆறுதலை கூறுவதுடன், உதவி தொகையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரோபோ ஷங்கர் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.
சொன்னதை சொன்னபடியே இன்று, உயிரிழந்த ராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கினார் ரோபோ ஷங்கர். இதுவரை மற்ற நடிகர்கள் யாரும் எதுவம் கூறாமல் அமைதிகாத்து வரும் நிலையில் ரோபோசங்கரின் இந்த முயற்சிக்கு அனைவரும் வாழ்த்து கூறியுள்ளனர்.