மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாக நடந்த விஷேசம்.! மணப்பெண் கோலத்தில் தேவதையாக ஜொலிக்கும் ரோஜா நடிகை! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் ரோஜா. இந்தத் தொடரில் ஹீரோயினாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வருபவர் பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இவர் தெலுங்கில் அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பிரியங்கா நல்காரி பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழிலும் காஞ்சனா 3 திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரியங்கா நல்காரி மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றாக இணையத்தில் வெளியாகி வைரலானது. அதாவது பிரியங்காவின் தங்கை பாவனா நல்காரியின் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது பிரியங்கா மணப்பெண் போல முழு மேக்கப்பில் கலந்து கொண்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.