#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோஜா, சீதாராமன் சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. குவியும் வாழ்த்துகள்..! அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்..!!
ரோஜா, சீதாராமன் சீரியல் நடிகைக்கு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நெடுந்தொடர் ரோஜா. இந்த நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நல்கார் பிரியங்கா. இந்த சீரியலை பிரபல யூடியூபர்கள், நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நெடுந்தொடரில் சீதாவை கதாநாயகனின் சித்தி அழகி இல்லை என கூறி வறுத்தெடுக்கிறார்.
இதனை மீறி நாயகனும் - நாயகியும் எப்படி ஒன்றிணையப்போகிறார்கள் என்பதே கதைக்கரு ஆகும். இந்த நிலையில், நடிகை நல்கார் பிரியங்காவிற்கு மலேஷியாவில் உள்ள முருகன் கோவிலில் திடீரென திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.