மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான 3 தமிழ் திரைப்படங்கள்.!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'டைம்லைட்' பிரிவில் விடுதலை மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலக அளவில் முக்கிய மற்றும் பிரபல திரைப்பட விழாவாக இது கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'டைம்லைட்'பிரிவில் திரையிட விடுதலை மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அதேபோல் பிக் ஸ்கிரீன் பிரிவில் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் தேர்வாகியுள்ளது.