மீண்டும் சர்ச்சையில் சிக்கி கைதான ரௌடி பேபி சூர்யா: சிக்காவும் சிக்கிய பரிதாபம்.!



Rowdy Baby Surya & Chikka Arrested by Police 

 

சமூக வலைத்தளத்தில் எப்படியாவது பிரபலமாகிவிடவேண்டும் என எண்ணி, சமூக சீர்கேடான விஷயங்களை செய்து, இறுதியில் பலரை விபச்சார புகார்களையும் எதிர்கொண்டவர் ரௌடி பேபி சூர்யா. 

இவர் கடந்த ஆண்டு கோவையை சேர்ந்த தம்பதியை மிரட்டியதாக கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் சூர்யா ஜாமின் பெற்று வெளியே வந்தார். 

வெளியே வந்த பின்னர் சில மாதங்கள் அமைதியாக இருந்த சூர்யா, மீண்டும் தனது வேலையை காண்பிக்க தொடங்கினார்.இந்நிலையில், ரௌடி பேபி சூர்யா மற்றும் அவரின் ஆண் நண்பர் சிக்கா ஆகியோர் மதுரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

சூர்யா மதுரையை சேர்ந்த சித்ரா என்ற பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து இருக்கின்றனர்.