திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சோ.. நடிகர் ராமராஜனுக்கு என்னதான் ஆச்சு! தீயாய் பரவிய ஷாக் தகவல்! வெளிவந்த உண்மை!!
தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் ராமராஜன். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் ஜொலித்த அவர் பல ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாக இருந்துள்ளார். நடிகர் ராமராஜன் கிராமத்து கதை சார்ந்த படங்களிலேயே பெரிதும் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளிவந்த நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது.
அதிலும் அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடி பெரும் வசூல் சாதனை படைத்தது. சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த ராமராஜன் அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் ராமராஜனின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ராமராஜனின் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் ராமராஜனைப் பற்றி தவறான வதந்தியை பரப்பி வருகின்றார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மேலும் அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். விரைவில் அவர் தான் நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.