மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி! முன்னணி பிரபலம் ஓபன் டாக்!
தல அஜித் அவர்கள் உலக மக்களால் போற்றப்படும் ஒரு மிக சிறந்த நடிகர். இவரின் எளிமையான நடிப்பு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரின் பிறந்த நாள், படத்தை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் இந்த வருடத்தின் ஒரு சிறந்த படமாகவும் அமைந்தது. இந்நிலையில் தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வலிமை படத்தின் வில்லனாக நடிக்கரும்,இயக்குனருமான எஸ். ஜே.சூர்யா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது. அதனை குறித்து எஸ். ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார். அதாவது வலிமை படத்திலிருந்து எந்த ஒரு அழைப்பும் தனக்கு வரவில்லை என்றும் தற்போது அவர்கள் அழைத்தால் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி என்றும் கூறியுள்ளார்.
இவர் இதற்கு முன்பு மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வலிமை படத்திலும் வில்லனாக நடித்தால் மாஸாக தான் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.