திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
SAC With Vijayakanth: இயக்குனர் எஸ்.எஸ் சந்திரசேகர் விஜயகாந்தின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!
தமிழ் திரையுலகின் மக்கள் மனதை ஆட்கொண்ட, இழகிய மனம்படைத்த நடிகராக வலம்வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் அரசியலில் இறங்கி பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துவிட்டாலும் மக்களின் மனதில் நீங்காது இருக்கிறார்.
திரைப்படங்களில் நடிக்கையில் தனியொரு மனிதராக விஜயகாந்த் செய்த பல நற்பணிகளை பாடலாக பாடிக்கொண்டே சென்றால், சென்னையின் சுற்றளவும் போதாது என்றுதான் கூறவேண்டும்.
பல ஏழைகளின் வீட்டில் அடுப்பெரிய உதவிய கருப்பு எம்.ஜி.ஆர் என போற்றப்பட்ட விஜயகாந்த், அரசியல் பயணத்திற்கு பின்னர் அவரின் உடல்நலம் குன்றி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் எஸ்.ஏ சந்திரசேகரர் தனது நண்பர் விஜயகாந்துடன், அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்தார். இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் ஹிட் மன்னர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடிகர் விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் திருமணம் செய்து 33 வது ஆண்டில் ஆடியது வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.