மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாகார்ஜுனா குடும்பத்தில் பெரும் சோகம்.! சோகத்தில் தவிக்கும் குடும்பம்..
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்கினேனி நாகார்ஜுனா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளாகவும் உள்ளார். இவரது தந்தையும் பிரபல நடிகரான அக்கினேனி நாகேஸ்வர ராவ். இவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் நாகார்ஜுனா தான் கடைசியாகும்.
1984ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், பிரபல நடிகர் வெங்கடேஷின் சகோதரியான லட்சுமி நாயுடுவை திருமணம் செய்தார். இவருக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா ஆவார். அதன்பிறகு 1991ம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் சையது கொண்டார் நாகார்ஜுனா.
இவர்களுக்கு அகில் என்று ஒரு மகன் உள்ளார். அக்கினேனி குடும்பத்தை சேர்ந்த பலரும் திரைத்துறையில் உள்ளனர். நாகேஸ்வரர் ராவுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் நாகர்ஜுனா தான் கடைசியாகப் பிறந்தவர்.
இந்நிலையில், இவரது மூன்றாவது சகோதரி நாக சரோஜா என்பவர் நேற்று உயிரிழந்தார். அக்கினேனி குடும்பத்திலேயே சரோஜா மட்டும் திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அதனாலே இவரின் இறப்பு தாமதமாகத் தான் தெரிய வந்துள்ளது இதனால் நாகர்ஜுனா பெரும் சோகத்தில் உள்ளார்.