#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சோ.. சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் வீட்டில் நேர்ந்த பெரும் துயர சம்பவம்..
சின்னதிரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா முதல் சீரியலின் மூலமாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த சீரியலிற்கு பின்பு சின்ன திரையில் பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்தமான நடிகையாக பெயர் பெற்றிருக்கிறார்.
இது போன்ற நிலையில், தற்போது ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை உடல்நல குறைவால் உயிர் இழந்து விட்டார் எனும் செய்தி இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து ரசிகர்கள் ரச்சிதா மகாலட்சுமிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.