மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 நாட்களில் ரூ. 295.7 கோடி வசூல் செய்து, மாபெரும் சாதனை படைத்த சலார் திரைப்படம்.!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரவி பஸ்ரூர் இசையில் உருவான திரைப்படம் சலார். படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியான சலார் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவை மட்டுமல்லாது பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை உறுதி செய்யும்பொருட்டு வசூலும் குவிந்து வருகிறது.
படம் வெளியான அன்று மட்டும் உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில், சலார் திரைப்படம் வெளியான 2 நாளில் மொத்தமாக உலகளவில் ரூ.295.7 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது நாளில் ரூ.117 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது. இப்படம் கட்டாயம் ரூ.1000 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BlockbusterSALAAR continues to set the box-office ablaze, with packed houses and an overwhelming response from the audience all over the world 🤗💥 #RecordBreakingSalaar #SalaarRulingBoxOffice#SalaarCeaseFire #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan… pic.twitter.com/e3u6sFD0it
— Hombale Films (@hombalefilms) December 24, 2023