மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரேநாளில் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் மலைக்கவைத்த சலார் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கே.ஜி.எப் 1 & 2 பாகங்களின்வெற்றிக்கு பின்னர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சலார். படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரவி பஸ்ரூர் இசையில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் நேற்று வெளியானது.
இந்நிலையில், சிலர் திரைப்படம் நேற்று உலகளவில் வெளியாகி 178.7 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, இன்று மற்றும் நாளை வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், 3 நாட்களில் படம் ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை வசூல் செய்யலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
The most violent man announced his arrival ⚠️#SalaarCeaseFire hits 𝟏𝟕𝟖.𝟕 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) on the opening day!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 23, 2023
𝐓𝐡𝐞 𝐛𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐨𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚𝐧𝐲 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐅𝐢𝐥𝐦 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟑 💥#BlockbusterSalaar #RecordBreakingSalaar… pic.twitter.com/yJJfW9OA2t