மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ருர் இசையில், ஹோம்பாலே நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ், சுருதி ஹாசன், ஜெகபதிபாபு, பிரியா ரெட்டி, பாபி சிம்ஹா, மைம் கோபி உட்பட பலரும் நடித்துள்ளார்கள்.
படம் டிசம்பர் 22ம் தேதி 5 மொழிகளில் உலகளவில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எப் படம் போல தரமான சண்டைக்காட்சிகளுடன் சலார் படமும் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள தங்கசுரங்கத்தை மையப்படுத்தி கே.ஜி.எப் படத்தை இயக்கி வெளியிட்ட பிரசாந்த் நீல், அடுத்தபடியாக சரித்திரத்தை புரட்டி தனது படைப்பை வழங்கி இருக்கிறார். இதன் டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.